Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

தவறான தகவல்களைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம்: ஆவின்

தவறான தகவல்களைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம்: ஆவின்

அனைத்து ஆவின் பொருட்களும் வழக்கம்போல் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படுவதாக ஆவின் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

ஆவின் நிறுவனம் பால் மற்றும் பால் பொருட்கள் உட்பட 175-க்கும் மேற்பட்ட பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. சென்னையில் 36 ஆவின் பாலகங்கள் மற்றும் 1,000-க்கும் மேற்பட்ட கடைகள் மூலம் இவை பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றன.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ரூ.1 விலையிலான சாக்லேட் மற்றும் பால் ரஸ்க் அறிமுகப்படுத்தப்பட்டன. இவற்றுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும், தயிர், லஸ்ஸி, பனீர் உள்ளிட்ட பொருட்களின் விற்பனை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

தீபாவளியை முன்னிட்டு, பல்வேறு வகையான சிறப்பு இனிப்புகள் தயாரிக்கப்பட்டு, வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப வழங்கப்பட்டு வருகின்றன. விற்பனை முகவர்களிடம் இருந்து பெறப்படும் தேவையின் அடிப்படையில், பொருட்களைத் தடையின்றி விநியோகிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

ஆவின் நிறுவனத்தின் எந்தப் பொருளின் உற்பத்தியும் முழுமையாக நிறுத்தப்படவில்லை. அனைத்து பொருட்களும் வழக்கம்போல் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன. உற்பத்தி நிறுத்தம் குறித்த தவறான தகவல்களைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என ஆவின் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது

முந்தைய செய்தி
Private capex pipeline grows fourfold since 2014: Report
அடுத்த செய்தி
பழைய மின் மீட்டர்களை புதிய கட்டிடங்களில் பொருத்த தடை: புதிய கட்டுப்பாடுகள் அறிமுகம்

தொடர்புடைய செய்திகள்